Enter your Email Address to subscribe to our newsletters
மும்பை, 23 அக்டோபர் (ஹி.ச.)
மும்பையில் ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் உள்ள ஜே.எம்.எஸ் வணிக மையத்தில் இன்று (அக் 23) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வணிக வளாகத்தில் மேல் தளத்தில் சிக்கியவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வணிக மையத்தில் மேல் தளங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் புகை வேகமாக பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடம் முழுவதும் புகை வேகமாக பரவி வந்ததால், தீயைக் கட்டுப்படுத்த கட்டிடத்தின் மேல் தளங்களை அடைவதில் தீயணைப்பு வீரர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இருப்பினும், தீயணைப்புக் குழு உடனடியாக பாதிக்கப்பட்ட தளத்தைச் சுற்றி வளைத்து, தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அப்பகுதியை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் மின்கசிவு காரணமாக இருக்கலாம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்த தகவலும் இது வரை வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b