Enter your Email Address to subscribe to our newsletters
ராணிப்பேட்டை, 23 அக்டோபர் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்ட முழுவதும் 220 ஏரிகள் தனது முழு கொள்ளளவு நிரம்பி உபரிநீர் ஆர்ப்பரித்து வெளியேறி கொட்டி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழையால் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்ட முழுவதிலும் உள்ள ஏரிகள், குளங்கள், கானாரு உள்ளிட்ட நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட முழுவதுமே பரவலாக மழை பெய்தது அதில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 சென்டிமீட்டர் மழையும், மாவட்ட முழுவதும் மொத்தமாக 34 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி தொடர் மழையின் காரணமாக பொன்னை மற்றும் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வாலாஜா பாலாறு அணைக்கட்டு தடுப்பணைக்கு சுமார் வினாடிக்கு 7300 கன அடி விதம் மகேந்திரவாடி, சக்கரமல்லூர், காவேரிப்பாக்கம் ஆகிய கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் உள்ள 319 ஏரிகளில் 220 ஏரிகள் தனது முழு கொள்ளளவை நிரம்பி உபரி நீ வெளியேறி ஆர்பரித்து கொட்டி வருகிறது. அதேபோல் 99 சதவீதம் 31 ஏரிகள் நிரம்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சிறுவர்கள் குளிக்கவும் வேடிக்கை பார்க்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை அவ்வழியாக அழைத்துச் செல்லவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN