சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் - தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை, 23 அக்டோபர் (ஹி.ச.) திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்படியே அணையில் இருந்து தென்பெண்ண
Sathanur Reservoir


திருவண்ணாமலை, 23 அக்டோபர் (ஹி.ச.)

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்படியே அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் இருகரையையும் ஒட்டி செல்கிறது.

மேலும், தென் தன்மையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஆகிய வருவாய் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், காவல் துறை, ஊராக வளர்ச்சி துறை சார்பில் வெள்ளை அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN