கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் இன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை
தர்மபுரி, 23 அக்டோபர் (ஹி.ச.) தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளி
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


தர்மபுரி, 23 அக்டோபர் (ஹி.ச.)

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.

தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வலுப்பெறாது என்றும் புயல் உருவாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நீடித்து வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் பரவலாக கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூரில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, நேற்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டடார்.

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இதனை தர்மபுரி கலெக்டர் சதீஸ் அறிவித்து உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 15-ந்தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM