Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோயம்பேடு வணிக வளாகத்துக்கு தினம் தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர், பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்கிறது எனவே இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க, சாலை மேம்படுத்துதல், சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 40 கோடி ரூபாய் செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது, இதில் 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது இந்த பணிகள் முடிந்த பின் தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்காது.
தற்போது மழை நின்ற பின் விரைவாக டிசம்பர் மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முடிவடையும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின் போது தனக்கு சாதிய பாகுபாடு காரணமாக அழைப்பு இல்லையென செல்வபெருந்தகை பேசியது குறித்த கேள்விக்கு,
நிறைய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளோம்.
மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஓடி கொண்டுள்ளோம்.
சிறிய சிறிய சம்பவங்கள் பேசி தீர்க்கப்படும்.
ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் கால் கூட தரையில் படாமல் இபிஎஸ் பணி செய்தார்.
கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து அனைவரும் வீட்டில் புட்டி கொண்டிருந்த நேரத்தில் களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு இபிஎஸ் எந்த அருகதையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ