தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் மது விற்பனை குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம்
ஈரோடு, 23 அக்டோபர் (ஹி.ச.) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்‌. அப்போது அவர் பேசியதாவது, மது விற்பனை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி சொல
Minister Muthusamy


ஈரோடு, 23 அக்டோபர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்‌.

அப்போது அவர் பேசியதாவது,

மது விற்பனை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி சொல்வது தவறானது. கூடுதல் நடவடிக்கை எடுத்து டாஸ்மார்க்கில் எந்த வேலையும் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை கூடுதலாக இருப்பது வழக்கமான ஒன்று.

இதற்காக அரசு தனி முயற்சி எடுப்பதில்லை.

மாறாக படிப்படியாக மது கடைகள் படிப்படியாக மூடும் நடவடிக்கையில் அரசு செய்து வருகிறது.

குடிப்பவர்கள் பழக்கத்திலிருந்து விடுவிக்க அரசு பல நடவடிக்கைகளை செய்து வருகிறது. விற்பனை அதிகரிக்க எந்த தனி முயற்சியும் அரசு மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மது குடிக்கும் பழக்கத்தை மாற்றுவதற்கு அவர்களுடன் ஒட்டி தான் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் சட்டத்தின் மூலம் அதை செய்ய முடியாது, மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

தீபாவளி பண்டிகை தவிர மற்ற நாட்களில் இதே போன்று விற்பனை இல்லாமல் இருப்பதை பார்க்க வேண்டும். அது குறித்து சந்தோஷப்பட வேண்டும். ஒரு நாள் விடுமுறை என்பதால் மது விற்பனை அதிகரித்து உள்ளது என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்கள் இது போன்று மது விற்பனை இல்லாதது மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

மதுபாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கப்படும் பணம், அரசியல் வங்கி கணக்கில் நேரடியாக வருகிறது. இதனால் அந்த பணத்தை தவறாக பயன்படுத்த முடியாது, நீதிமன்ற உத்தரவுபடி தான் மதுபாட்டில்களுக்கு வைப்புத் தொகை பெறப்படுகிறது. ஆனால் கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படுவதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

மனமகிழ் என்ற பெயரில் அரசு அனுமதி வழங்கப்படுவது, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்கள் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படுகிறது.

கூடுதலாக அனுமதி வழங்கப்படுவது இல்லை. அதே நேரத்தில் என்னென்ன வழிமுறைகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தான் அனுமதி வழங்கப்படுகிறது என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN