Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வாரப்பட்டி ஊராட்சியில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா(டிட்டோ) அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம்பாளையம், காடம்பாடி, அப்பநாயக்கன்பட்டி ஆகிய கிராமத்தின் நிலங்களும் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பருவாய் கிராமத்தின் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நிலத்தை கொடுத்தவர்களுக்கு குறைந்த இழப்பீடு தொகை மட்டுமே வழங்குவதாகவும் அதனை உயர்த்தி தர வேண்டுமென நிலத்தை கொடுத்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம், முதல்வரிடம் மனு அளித்திருந்த நிலையில் இன்றைய தினம் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஒரு செண்ட் நிலத்திற்கு 89 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாகவும் அதனை உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் கூறும் தொகை என்பது மிக மிக குறைந்த இழப்பீடு தொகை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan