கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 38.18 அடியாக உயர்வு
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.) தொடர் மழை காரணமாகசிறுவாணி அணையின் நீர்மட்டம் 38.18 அடியாக உயர்ந்தது. அடிவாரத்தில் 13 மி.மீ. அணைகட்டு பகுதியில் 35 மி.மீ. மழை பொழிவு பதிவாகியுள்ளது. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணைய
The water level of the Siruvani Dam has risen to 38.18 feet.


கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)

தொடர் மழை காரணமாகசிறுவாணி அணையின் நீர்மட்டம் 38.18 அடியாக உயர்ந்தது.

அடிவாரத்தில் 13 மி.மீ. அணைகட்டு பகுதியில் 35 மி.மீ. மழை பொழிவு பதிவாகியுள்ளது.

அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 38.18 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவில் இருந்து, 94.26 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகின்றன.

இந்த தொடர் மழை காரணமாக நீர்மட்டம் விரைவில் நிரம்பும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan