தாய் கழுத்து நெறித்து கொலை - 14 வயது மகன் கைது
கள்ளக்குறிச்சி, 23 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீழக்குப்பம்வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். லாரி ஓட்டுனரான இவருக்கும் மகேஸ்வரி என்ற 40 வயது பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற
Arrest


கள்ளக்குறிச்சி, 23 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீழக்குப்பம்வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்.

லாரி ஓட்டுனரான இவருக்கும் மகேஸ்வரி என்ற 40 வயது பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

குணசேகரன் லாரி ஓட்டி முடித்த பின்பு வீட்டிற்கு சில நாட்களுக்குப் பிறகு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.

வீட்டிற்கு வந்து செல்லும் பொழுது வீட்டிற்கு தேவையான பொருட்களும் தனது மகன்களுக்கு தேவையான தின்பண்டங்களையும் அதிக அளவில் வாங்கி வந்து கொடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் மகன்களுக்கு புத்தாடை வாங்கி வந்து கொடுத்ததோடு மகேஸ்வரியை புத்தாடை அணிந்து கொள்ளுமாறு கேட்டார்.

ஆனால் அடிக்கடி மது போதையில் வந்து செல்லும் தனது கணவர் வாங்கி வந்த புத்தாடையை மகேஸ்வரி அணியவில்லை. இதனால் அவர்களுக்குள் 19ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஸ்வரியை குணசேகரன் அடித்ததாக கூறப்படுகிறது.

அதனை 14 வயதான தனது இரண்டாவது மகன் நேரில் பார்த்துள்ளார். அதன்பின் குணசேகரன் சென்ற பின்பு, தந்தை என்னை அடித்தபோது ஏன் வேடிக்கை பார்த்தாய்? நீ உனது தந்தைக்கு ஆதரவாக இருக்கின்றாயா? என கேட்டு மகேஸ்வரி தனது இரண்டாவது மகனை அடித்து உதைத்துள்ளார்.

அந்த கோபத்தில் மகேஸ்வரி வீட்டிலிருந்து புறப்பட்டு வயலுக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் மகேஸ்வரி வீட்டுக்கு வராததால் அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை தேடி அவர் சென்ற விவசாய நிலம் பகுதிக்கு நேரில் சென்று தேடி பார்த்த பொழுது,

அங்குள்ள விவசாய நிலத்தின் மகேஸ்வரி சடலமாக கிடந்ததை, அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரியின் உறவினர்கள் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு, மகேஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர்

அதன்பேரில் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகேஸ்வரி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர்.

அப்போது மகேஸ்வரி உடல் அருகே கிடந்த சட்டை பட்டன்களை எடுத்த போலீசார், குணசேகரன் மீது சந்தேகம் அடைந்தனர். விசாரணை நடத்திய பொழுது குணசேகரன் அணிந்திருந்த அதே பிராண்ட் சட்டை, தனது மகன்களுக்கும் வாங்கி வந்து கொடுத்தது வெளியே வந்தது.

தீவிர விசாரணையில் இரண்டாவது மகன் 14 வயதான சிறுவன் அணிந்திருந்த சட்டையில் இருந்த இரண்டு பட்டன்கள், அதில் இல்லாததால், சந்தேகம் அடைந்த போலீசார் 14 வயது சிறுவனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அன்றைய தினம் தனது தந்தைக்கும், தனது தாயாருக்கும் தகராறு ஏற்பட்ட பின்பு, நான் எனது தந்தையை தட்டி கேட்கவில்லை எனக் கூறி, எனது தாய் என்னை அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவர் நடந்து சென்ற பொழுது பின் தொடர்ந்து சென்று வயல்வெளி பகுதியில் எனது தாயாரை கீழே தள்ளி அவரது கழுத்தில் கைகளால் நெரித்து கொலை செய்ததாக கூறினார்.

இதையடுத்து மகேஸ்வரியின் சந்தேக மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சிறுவனை கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி, சிறுவனை காடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN