கனமழை காரணமாக ஏற்காடு மலை பாதையில் அக்டோபர் 24-ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை
சேலம், 23 அக்டோபர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள
கனமழை காரணமாக ஏற்காடு மலை பாதையில் அக்டோபர் 24-ந்தேதி வரை வாகனங்கள் செல்ல தடை - சேலம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


சேலம், 23 அக்டோபர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து, சேலம் ஏற்காடு மலை பாதையில் நேற்று இரவு 7 மணி முதல் அக்டோபர் 24-ந்தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்து சேலம் மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

கனமழை எதிரொலியால் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், சுற்றுலா செல்ல முன்பே திட்டமிட்டு இருந்த பயணிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM