தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் நிச்சயமாக வரவேற்போம் – ஏ.சி.சண்முகம்
சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.) சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 224 நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அருகில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்க
Ac shanmugam


சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)

சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 224 நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள

மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அருகில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மருது சகோதரர்களுக்கு காந்தி மண்டபத்தில் சிலை வைத்தற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகள்.

இங்கு கொடி காத்த குமரனுக்கு சிலை வைக்க வேண்டும் என்றார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளோம், தொடர்ந்து 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இடம்பெறுவோம் என்றார்.

தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் நிச்சயமாக வரவேற்போம், அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் சேர்ந்தால் மட்டுமே பலமாக இருக்கும் எனவும் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ