Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 24 அக்டோபர் (ஹி.ச.)
பெங்களூருல் உள்ள விமானப் படையின் பயிற்சி கமாண்ட் தலைமையகத்தில் அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் பயிற்சி கமாண்ட் தளபதிகள் மாநாடு-2025 நடைபெற்றது.
இந் மாநாட்டில தலைமை வகித்து பேசிய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் பேசியதாவது,
விமானப்படை பயிற்சி கமாண்ட்டின் கீழ் செய்ல்படும் அனைத்து பயிற்சி நிறுவனங்களின் தளபதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பயிற்சி முறைகளில் மாற்றம், கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் இந்திய விமானப்படையின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்றுவிப்பு நடைமுறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாநாட்டின் போது, விமானப்படை தளபதி, அனைத்து பயிற்சி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தார்.
பயிற்சி ஆணையகத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளை அவர் பாராட்டினார்.
புதிதாக உருவாகும் உலகளாவிய அச்சுறுத்தல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகள் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வியூகங்களை கையாளுதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வகை பயிற்சி பிரிவுகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக விமானப்படை தளபதி கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்
Hindusthan Samachar / P YUVARAJ