Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று
(அக் 24)தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தற்போது தொல்காப்பியப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி (Students' Eco-Tour)கல்வி நிறுவனங்கள் (பள்ளி /கல்லூரி (அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதள முன்பதிவு மூலம்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை(வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர)காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை
பள்ளிகள் அனுமதிக்கப்படும் நாட்கள்
* சென்னை மாநகராட்சி பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை
* அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள்: வெள்ளிக்கிழமை
*தனியார் பள்ளிகள்: திங்கட்கிழமை, புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
பொது மக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம்
(Guided Tour for General Public) (அதிகபட்சம் 100 நபர்கள், இணையதள முன்பதிவு மூலம்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) (பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை)
பொது மக்களுக்கான நடைப்பயிற்சி
(பதிவுசெய்யப்பட்ட நடைப்பயிற்சி ஒரு முறை நுழைவு) (அதிகபட்சம் 100 நபர்கள் இணையதள முன்பதிவு மூலம் அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட)காலை: காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரைமாலை: மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
*மாணவர்கள், ஆசிரியர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.10;
*வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம்.
*தொல்காப்பியப் பூங்காவில் ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.20ஆக நிர்ணயம்.
*நடைப்பயிற்சி அனுமதி கட்டணம் மாதம் ரூ.500; 3 மாதங்களுக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயம். 6 மாதங்களுக்கு ரூ.2,500 கட்டணம், 12 மாதங்கள் ரூ.5000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*மகிழுந்து கட்டணம் ஒன்றிற்கு ரூ.20
*சிற்றுந்து பேருந்து கட்டணம் ஒன்றிற்கு ரூ.50
*புகைப்பட கருவி ஒன்றிற்கு ரூ.50
*ஒளிப்பதிவு கருவி ஒன்றிற்கு ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியப் பூங்கா திங்கள்கிழமை முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும். பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை. தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பார்வையிடலாம். காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்
இவ்வாறு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b