சென்னை பல்லாவரம் வார சந்தையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச) வாரம் தோறும் பல்லாவரத்தில் நடத்தப்படும் வார சந்தையில், காலாவதியான சாக்லெட், பிஸ்கட், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக., காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுயடுத்
Food safety


சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச)

வாரம் தோறும் பல்லாவரத்தில் நடத்தப்படும் வார சந்தையில், காலாவதியான சாக்லெட், பிஸ்கட், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள்

விற்பனை செய்யப்படுவதாக.,

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதுயடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,

சந்தையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில்,

பாக்கெட்டில் தயாரிக்கப்பட்ட இடம், தயாரிக்கும் உணவுப்பொருள் நிறுவனத்தில் பெயர், காலாவதி தேதி எதுவும் குறிப்பிடப்படாமல்

இருபதை கண்டனர்.

அதேபோல்., Blink it

என்ற நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்படும் பொருட்கள் காலாவதி தேதி முடிந்த நிலையில் இருந்த உணவு பொருட்களும் இருப்பது தெரிந்தது.

மேலும்., தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணம் அப்பளம் போன்ற உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை 500 கிலோ வரையிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ