வால்பாறை பகுதியில் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
கோவை, 24 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் சாலைகளில்
In Coimbatore’s Valparai region, the movement of wild elephants during nighttime has increased significantly. Due


கோவை, 24 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது.

இதனால் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வருகின்றன இவைகளால் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு நேராக சென்று விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்வதால் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும்.

என வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர்கள் அறிவுறுத்தலின்படி வனவர் முத்து மாணிக்கம் தலைமையில் வன மோதல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan