Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச)
ரவுடி நாகேந்திரன் இளைய மகனான அஜித் ராஜ்கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகிகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் அவரது தகப்பனார் மறைந்த ரவுடி நாகேந்திரனின், 16 ம் நாள் காரியம் நடக்கவிருக்கிறது.
இதற்கு அஜித் ராஜுக்கு 2 நாட்கள் பரோல் வழங்க கேட்டு நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இதற்கு காவல்துறை தரப்பில்,
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அஜித் ராஜிக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை என விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேந்திரனின் 16 -வது நாள் காரியம் நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் பரோல் வழங்கி
உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ