Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 அக்டோபர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில், நாளை (அக் 25) நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுடையோர் பங்கெடுக்க அம்மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஊரக வாழ்வாதார இயக்கத்தில், 18 முதல், 45 வயது வரையுள்ளவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் மூலம், வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாளை (அக்., 25) நடக்க உள்ளது.
அதில், 8ம் வகுப்பு முதல், பட்ட மேற்படிப்பு வரை படித்த இளைஞர்கள், மகளிர் பங்கேற்கலாம். பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். விபரங்களுக்கு, 0427 - 2411552, 94861 59320 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b