தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் - தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.) சென்னை தியாகராயநகர் தொகுதியின் வாக்குச்சாவடிக்குட்பட்ட திமுகவினர் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக சுமார் 13000 அதிமுகவினருடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கியதாகக் கூறி அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன
தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் - தேர்தல் ஆணையம் தகவல்


சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை தியாகராயநகர் தொகுதியின் வாக்குச்சாவடிக்குட்பட்ட திமுகவினர் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக சுமார் 13000 அதிமுகவினருடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கியதாகக் கூறி அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (24.10.2025) காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாதிடுகையில், நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பீகாரைப் போன்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் (நவம்பர் மாதம் முதல் வாரம்) முதல் துவங்கப்பட உள்ளது.

அப்போது இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், பீகார் திறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b