Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையானது தென்காசி மாவட்டத்தில் தீவிரமடைந்து கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழையானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.
இந்த நிலையில், கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் தரையில் சாய்ந்து முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடர் கனமழை காரணமாக நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கனமழை காரணமாக தற்போது தரையில் சாய்ந்து சேதமாகி உள்ள நிலையில், விவசாயிகள் பெருமளவு நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே, தென்காசி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN