Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 24 அக்டோபர் (ஹி.ச.)
கோவை ஆர்.எஸ் புரம் ஸ்ரீ மாருதி கான சபாவில் வருகிற நவம்பர் 1-ம் தேதி பகவத் கீதை செய்யுள்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பேரூர் சிரவை மற்றும் காமாட்சிபுரம் ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய சின்மயா மிஷன் சுவாமி அனுகூலானந்தா:-
சின்மயா மிஷன் 1951-ம் ஆண்டு தொடங்கி 2026-ம் ஆண்டில் 75 ஆண்டு கால சேவையை நிறைவு செய்கிறது அதனை முன்னிட்டு சின்மயா மிஷனின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தா ஜாதி, மதம்,இனம்,பாலினம்,வயது வேறுபாடுகளை கடந்து அனைவருக்கும் பகவத் கீதையை தமிழில் படிக்க வேண்டும் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்.
இந்த பகவத் கீதை தமிழில் மொழியாக்கம் செய்ததில் இசைஞானி இளையராஜா 120 ஸ்லோகங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
அதேபோல சின்மயா யுவ கேந்திராவின் இளைஞர்கள் இதற்காக செயற்கை நுண்ணறிவு அனிமேஷன் காணொளியை உருவாக்கி உள்ளனர்.
இதை கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக வெளியிட்டார்.
இதற்கான விழா ஏற்பாடுகளை சின்மயா இவகேந்திரா முன்னாள் உறுப்பினர்கள் அமைப்பு செய்து வருகின்றனர்.என தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan