பயணிகளின் வரவேற்பு இல்லாத காரணத்தால் 6 சிறப்பு இரயில்களின் சேவைகள் ரத்து
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) பயணிகளின் வரவேற்பு இல்லாத காரணத்தால் 6 சிறப்பு இரயில்களின் 30 சேவைகள் ரத்து செய்துள்ளதாகவும், குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சிறப்பு ரயில்களுக்காக முன்பதிவு செய்துள்ளதாலும், பயணிகளின் கூட்டம் இல்லாத காரணத்தினாலும் சிறப
Sabarimala special train service


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

பயணிகளின் வரவேற்பு இல்லாத காரணத்தால் 6 சிறப்பு இரயில்களின் 30 சேவைகள் ரத்து செய்துள்ளதாகவும், குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே சிறப்பு ரயில்களுக்காக முன்பதிவு செய்துள்ளதாலும், பயணிகளின் கூட்டம் இல்லாத காரணத்தினாலும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

மைசூர் - திருநெல்வேலி இடையே அக்டோபர் 27 முதல் நவம்பர் 24 வரை 5 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், திருநெல்வேலி - மைசூர் இடையே அக்டோபர் 28 முதல் நவம்பர் 25 வரை 5 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், மைசூர் - காரைக்குடி இடையே அக்டோபர் 30 முதல் நவம்பர் 29 வரை 9 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், காரைக்குடி - மைசூர் இடையே அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை 9 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், மைசூர் - இராமநாதபுரம் இடையே அக்டோபர் 27 ஆம் தேதி 1 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், இராமநாதபுரம் - மைசூர் இடையே அக்டோபர் 28 ஆம் தேதி 1 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN