விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ இடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விழுப்புரம், 25 அக்டோபர் (ஹி.ச.) விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ இடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி
A massive protest was held in Villupuram by the Tamil Nadu Bahujan Samaj Party demanding that the documents related to the Armstrong murder case be handed over to the CBI.


விழுப்புரம், 25 அக்டோபர் (ஹி.ச.)

விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ இடம் ஒப்படைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் சார்பில் மாநில செயலாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் கோவிந்தசாமி முன்னிலையில் சமத்துவ தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசையும் மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகஅரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் பின்னர் மாநில துணை பொதுச் செயலாளர் ஸ்டீபன் ராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார் இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Hindusthan Samachar / V.srini Vasan