சென்னையில் இன்று அனைத்து பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகை அக் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக் 21ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில் அக்
சென்னையில் இன்று அணைத்து பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகை அக் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்களின் வசதிக்காக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக் 21ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதை ஈடுசெய்யும் வகையில் அக் 25ம் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இன்று (அக் 25) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

கடந்த 21ம் நாளான செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b