Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 25 அக்டோபர் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ராமர் கோவிலில் நாடு முழுவதும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
பின்னர் இரவு 9 மணியளவில் நடை அடைக்கப்படும்.
இந்த நிலையில் அயோத்தி கோவிலில் பக்தர்கள் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரவு 9 மணிக்கு பதிலாக 8.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நடை அடைக்கப்படும்.
மேலும், மதியம் 12.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மூடப்பட்டு, மதியம் 1 மணிக்கு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM