Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த காட்டாற்று வெள்ளத்தின் போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் உள்ள தடுப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், தற்போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால் இன்றுடன் 10-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர், தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குற்றாலம் பகுதியில் உள்ள மற்ற அருவிகளான ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN