Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 25 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசர் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டதாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் சுந்தரவாணன் மற்றும் பிரேம்நாத் ஆகிய இரு காவலர்களும் கைது செய்யாமல் இருப்பதற்கு கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து விசாரணை செய்ததில் இருவரும் கையூட்டு பெற்றது தெரியவந்த நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN