Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் பகுதியில் உடும்பு ஒன்று கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அருகில் உள்ள கால்வாயில் இருந்து உடும்பு வந்து ஜெனரேட்டர் அருகே தங்கி இருந்ததாகவும், அதனை ஊழியர்கள் பார்த்தபோது தாக்க முற்பட்பட்டதாகவும், அதனால் அடித்ததாகவும் MCC நிர்வாகம் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தது.
இந்த நிலையில் உடம்பை அடித்து கொலை செய்த MCC ஊழியர் பாலச்சந்தர் என்பவரை கிண்டி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தன்னை தாக்க வந்ததால் அடித்ததாக கைது செய்யப்பட்ட பாலச்சந்தர் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாலச்சந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வனத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ