Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மணிகண்டன் உடன் நட்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த மணிகண்டன் அதனை AI ஜெமினி ஆப் மூலம் ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்து இருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் இதுகுறித்து தனது உறவினரிடம் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளம் பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்.
கார் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்த மணிகண்டன் மீது வழக்கு பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இதுபோன்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan