Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம்-5, வார்டு-54, வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளை தெரு, வுட் வார்ஃப் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா,
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் 6 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு தாழ்வான பகுதிகளிலும் நேரடியாக சென்று சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக, இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். மண்டலம் 5க்குட்பட்ட தாழ்வான பகுதியாக உள்ளது ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவர்கள் கோரிக்கைகளை கேட்டு அறிந்து தீர்வு காணும் வகையில் அதனைத் தொடர்ந்து ஆய்வினையும் மேற்கொண்டுள்ளோம்.
கேனால் பகுதியை ஒட்டி உள்ளவை குடியிருப்புகளாக உள்ளன. B கேனால் பகுதியில் ஓட்டேரி நல்லா நீரும் இணைகிறது. அம்பத்தூர் கொளத்தூர் திரு.வி.க நகர் பகுதிகளில் இருந்து வரும் நீர் ஓட்டேரி நல்லா மூலம் பி கேனாலில் இணைகிறது.
மாநகராட்சி சார்பில் கேனால் பகுதி 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு டீசல் சுத்தப்படுத்தும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் போன்றவை நீர்வளத்துறை இடமிருந்து மாநகராட்சி தரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஓரிரு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை காரணமாக ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு,
அதிக மழை பெய்யும் போது சென்னை முழுவதும் பல இடங்களில் குழிகள் ஏற்படும் வார்டு வாரியாக நிதி ஒதுக்கீடு எத்தனை இடங்களில் புலிகள் இருந்தாலும் உடனடியாக கண்டறிந்து தற்காலிகமாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை முடிந்த பின் சாலை அமைக்கும் பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும்.
கிட்டத்தட்ட 2 ஆயிரம் பகுதிகளில் சாலை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது வார்டு வாரியாக அவை சரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு 206 பகுதிகள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டு 100 HB மோட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மழை அதிகமாக இருக்கும் என்று தகவல் முன்பே தெரியும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொது மக்களை பாதுகாப்பாக சமுதாயக்கூடம் பள்ளிக்கூடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய் போன்றவற்றை மாநகராட்சி சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாமும் அந்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தல் படி மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறப்பாக முடிக்கப்பட்டது. 10 முதல் 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருந்த நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் இரவில் தேங்கும் மழை நீர் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றும் வகையில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிக கேனால்கள் உள்ளது. சென்னை மாநகராட்சி ஒரு Un planned city.
பொதுமக்களும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பில் உள்ளார்கள்.
15 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தால் உடனடியாக வெள்ள நீர் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் போல் 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடாக மின்மோட்டார் மூலமாக வெள்ள நீரை வெளியேற்ற முடியும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ