10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணைகள் நவம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார் வளாகத்தில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். தொடர்ந்து மேடையில் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு வீட்டிற
Anbil Mahesh


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார் வளாகத்தில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

தொடர்ந்து மேடையில் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ்,

ஒரு வீட்டிற்கு நிலப்படி எப்படி முக்கியமோ அதேப்போல, ஒரு நிறுவனத்திற்கு ஹெச் ஆர் மிக முக்கியம் தான்.ஒரு நிறுவனத்தை ஆக்டிவாக வைத்துக் கொள்வது ஹெச் ஆர் தான்.ஹச் ஆர் பொசிஷனை-ஐ விட்டுக் கொடுக்காமல் பேசுவதற்கு எனது வீட்டிலும் ஒருவர் உள்ளார் அது எனது மனைவி.

ஹச் ஆர் என்றால் மனிதவளம் மேலாண்மை என்று மட்டும் இல்லை அதில் பலவற்றை உள்ளடங்கும். கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஹச் ஆர் தான்.

நான் முதல்வன் மூலம் HRATN -ஐ இணைத்துக் கொள்ள துணை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு தெரிவிக்கப்படும். மேலும், ஹச் ஆர் ஆகிய உங்களை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த விதத்தில் பயன்படுத்த விரைவில் முற்படுவோம் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் கூறியதாவது,

இன்றளவும் சென்னையில் வந்து பணிபுரிய வேண்டும் என்று கனவாக பலருக்கும் இருந்து வருகிறது.அடுத்த ஐந்து வருடத்திற்கு என்னென்ன தேவைப்படும் என்பதை வைத்து பள்ளி படிக்கும் பொழுதே அவர்களுக்கு பட்டம் படிப்பு படிப்பதற்கான யோசனைகளை வழங்கி வருகின்றனர்.

நானும் ஒரு பட்டதாரி என்று சொல்லக்கூடிய அந்த பட்டம், என்ன செய்யப் போகிறது,.! வேலை கொடுத்தால் மட்டுமே அதற்கு மரியாதை.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணைகள் நவம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும்.நான்காம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 10 மற்றும் 12 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ