ஊசி மலை காட்சி முனை பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
நீலகிரி, 25 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழு கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்
Needle View Point


நீலகிரி, 25 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழு கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ள இந்த காட்சி முனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட்டத்தில் இருந்த பெண் காட்டு யானை குட்டியை ஈன்றதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டு வனத்துறையினர் சார்பில் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து யானைகள் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்ததால் சுற்றுலா தளம் இன்று திறக்கப்பட்ட நிலையில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பதினைந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால் கட்டணத்தை குறைக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN