Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வடகிழக்கு பருவமழை துவங்கி இருக்கிறது எனவும், ஒரு புறம் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் முளைக்க துவங்கி இருக்கின்றது எனவும், மறு புறம் பயிரிடப்பட்ட சம்பா பயிர் மழையில் முழ்கி நாசமாகி விட்டது எனவும் தெரிவித்தார்.
இது தி.மு.க அரசின் மெத்தனபோக்க எனவும், ஏரி ,குளம் போன்றவற்றை தூர்வாரி நீர் வெளியேற வழி வகை செய்ய வில்லை எனவும் தெரிவித்தார்.
மழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை உட்பட 4 முக்கிய மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
6.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் 18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து இருக்க வேண்டும், ஆனால் 5.5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.
நெல் ஈரப்பதம் அதிகமானதால் வாங்க மறுக்கின்றனர் என தெரிவித்த அவர், இது திமுக அரசின் தோல்வி எனவும், வெறும் விளம்பரத்தை மட்டுமே இந்த அரசு செய்கின்றது எனவும் குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் மீது அக்கறை இல்லாத அரசு இது எனவும். இந்த திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் கனிமவளங்கள் தென் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் கடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர்,இது குறித்து பலமுறை சுட்டிகாட்டியும் தடுக்கப்பட வில்லை எனவும்,திமுகவை சேர்ந்தவர்கள் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் திருவனந்தபுரம்செல்லும் போது 800 லாரிகள் வரை நானே பார்த்தேன் என தெரிவித்த அவர்,ஆயிரகணக்கான லாரிகளில் கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்தி செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
கேரளாவில்,கர்நாடகவில் கனிமவளங்களை தடுக்க சட்டம் இருக்கும் போது தமிழகத்தில் அது இல்லை எனவும்,இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவும், கனிம வள கடத்ததலை தடுக்க போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது தமிழகத்து செய்யும் மிக பெரிய துரோகம் என தெரிவித்த அவர்,நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் இருக்கின்றார் எனவும் கூட்டணி கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை எனவும் தெரிவித்தார்.
வைகோ ஏன் இது குறித்து அழுத்தம் கொடுக்க வில்லை,திருமா ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியலின மக்களுக்கு 22 சதவீதம் வரை இட ஒதுக்கீடு உயரும், இது தெரிந்தும் ஏன் திருமா மௌனமாக இருக்கின்றார், சீட்டுக்காகவா ? எனவும் கேள்வி எழுப்பினார்.
கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தை வாயை திறக்க வில்லை என தெரிவித்த அவர்,திமுக தலைவர் ஸ்டாலின் ,தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரை கூட சொல்ல தகுதியற்றவர் எனவும் தெரிவித்தார்.
கொ.ம.தே.க ஈஸ்வரன் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கேட்கவில்லை,பறவைகள், தெருநாய்கள், மாடுகளை கணக்கு எடுக்கின்றனர், ஓட்டுக்கு கணக்கு எடுக்கின்றனர், ஆனால் வேலை வாய்ப்பு, கல்விக்கு ஏன் கணக்கெடுப்பு நடத்த வில்லை எனவும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
கொங்கு மண்டலத்தில் அத்திகடவு - அவினாசி திட்டம் தோல்வி அடைந்து இருக்கிறது, இந்த திட்டத்தில் 20 சதவீத ஏரிகள் மட்டுமே பயன் அடைகின்றது எனவும்,இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந்த 4.5 ஆண்டு காலத்தில் புதிய திட்டங்கள், இருக்கும் காலத்தில் திட்டங்க ள் கொண்டு வர வில்லைஅதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போதே எனக்கு உடன்பாடு இல்லை,3500 கோடி ரூபாயில் கொண்டு வந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதன் பின்பு ஆட்சிக்கு வந்த திமுகவிற்குநீர்மேலாண்மை பற்றி திமுக அரசுக்கு எதுவும் தெரியவில்லை ,4.5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
தென்மாவட்டங்களில் கனிம வள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல போகின்றோம் என தெரிவித்த அவர்,கனிமவள கொள்ளை செய்வதற்காகவே ஒரு அமைச்சரை மாற்றி இருக்கின்றனர்,இந்த பணத்தை வைத்து திமுக தேர்தலை சந்திக்க இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.தமிழக அரசு கொண்டுவந்துள்ளதனியார் பல்கலை திருத்த சட்டம் தவறானது, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திரைப்படங்களில் சாதி குறித்து பேசுவது குறித்த கேள்விக்கு,
சாதி ஒழிய வேண்டும். சினிமா பாரத்தால் போதுமா? சரியான முறையில் கணக்கெடுத்து அவர்களை முன்னேற்ற கல்வி,வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உதயநிதி் ஸ்டாலினுக்கும் நெல் கொள்முதலுக்கும் தொடர்பில்லை என தெரிவித்த அவர்,டெல்டா பகுதிகளில் ஏன் சேமிப்புக்கான வசதிகளை இது வரை ஆட்சி செய்த அரசுகள் ஏற்படுத்த வில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்திகடவு அவினாசி திட்டம் தோல்வி என்றால், அதை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டுகின்றீர்களா என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் சேர்த்து சொல்கின்றேன் என அன்புமணி பதில் அளித்தார்.
டாக்டர்.ராமதாஸ் குறித்த கேள்விகளுக்கு,
இது எங்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து பேச முடியாது என பதில் அளித்தார்.
ராமதாஸ் வீட்டில் கருவி வைத்து ஒட்டு கேட்டீர்களா என்ற கேள்விக்கு , இது எங்கள் உட்கட்சி விவகாரம் , அது குறித்து பேச முடியாது எனவும் அன்புமணி பதில் அளித்தார்.
பா.ம.க இரு அணிகளாக பிரிந்து இருப்பதில் ஏதாவது மாஸ்டர் பிளான் இருக்கின்றதா என்ற கேள்விக்கு,
கையெடுத்து கும்பிட்டு விட்டு அன்புமணி ராமதாஸ் கிளம்பி சென்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan