பெரியார் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை
கள்ளக்குறிச்சி, 25 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் கல்வராயன் மலை அருகே உள்ள குண்டியாநத்தம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
Periyar Aruvi


கள்ளக்குறிச்சி, 25 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் கல்வராயன் மலை அருகே உள்ள குண்டியாநத்தம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தொடர்ந்து பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கல்வராயன் மலை பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே தற்போது பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் கல்வராயன் மலையில் இயற்கையை ரசிப்பதற்காகவும் குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவிப்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் கல்வராயன் மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பெரியார் அருவியில் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN