பீகார் கோபால்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
கோபால்கஞ்ச், 25 அக்டோபர் (ஹி.ச.) பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திரு
பீகார் கோபால்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு


கோபால்கஞ்ச், 25 அக்டோபர் (ஹி.ச.)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த 3 பேர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிட்டு பாஜகவில் இணைந்தனர்.

இதன்படி கஞ்ச் தொகுதியில் பிரசாத் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி சார்பில் சசி சேகர் சின்கா களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்றார்.

இதற்கு பா.ஜனதாவின் அழுத்தமே காரணம் என குற்றம் சாட்டிய பிரசாந்த் கிஷோர், அந்த தொகுதியில் பா.ஜனதா போட்டி வேட்பாளரான அனூப் குமார் ஸ்ரீவத்சவாவை கட்சி ஆதரிக்கும் என அறிவித்து உள்ளார்.

மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவரான அவருக்கு கட்சி மேலிடம் சீட் வழங்கவில்லை. எனவே அவர் சுயேச்சையாக அந்த தொகுதியில் களமிறங்குகிறார்.

கோபால்கஞ்ச் தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான அவரை ஆதரிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

அவரும், தனது கட்சியும் பா.ஜனதாவின் அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர்,

அவரை ஆதரிப்பதன் மூலம் பா.ஜனதாவின் மருந்தை அவர்களுக்கே கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM