Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 25 அக்டோபர் (ஹி.ச.)
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் அக்கட்சி செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளிக்கவில்லை எனக் கூறி அவரை கட்சியின் செயல்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
தர்மபுரியில் ராமதாஸ் தலைமையில் இன்று
(அக் 25) ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பா.ம.க. செயல்தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக காந்திமதி இருப்பார் என ராமதாஸ் தெரிவித்தார்.
மேலும் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தமிழ்க்குமரனை நியமத்த ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு தமிழ்க்குமரன் பெருமை சேர்ப்பார் என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் இருப்பதுதான் சத்திய தர்மம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ராமதாசின் அறிவிப்பு குறித்து திருப்பூரியில் அன்புமணி ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
கட்சி உள்விவகாரம் தொடர்பாக எந்த பதிலும் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b