Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச)
தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட அஸ்தம்பட்டி பணிமனையில் போக்குவரத்துக் கழக உட்தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சிலரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஓட்டுநர்களை பேருந்தை இயக்க அனுமதித்த கட்டுப்பாட்டாளர்கள் நால்வர் காலவரையின்றி பணியிடை நீக்கம். செய்யப்பட்டனர்
1)தேவன்.LPF. கிளைசெயலாளர்
2)ரவி LPF தருமபுரி மண்டல துணைத் தலைவர்
3)பெருமாள் பயணச்சீட்டு பரிசோதகர், தருமபுரி மண்டல துணைத் தலைவர் AALLF (திருமாவளவன் சங்கம்)
4)வெங்கடாஜலம் இளநிலை உதவியாளர் (வருகை பதிவு ஆய்வாளர்)
இந்த கட்டுப்பாட்டாளர்களின் முறைகேடுகளை கண்டறிய தவறியதால் தருமபுரி மண்டல ( வருவாய் மாவட்டம் சேலம்) அஸ்தம்பட்டி பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன் 3 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசுப் பேருந்துகள் நிரந்தர மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்படுகின்றன.
தற்காலிக ஓட்டுநர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ. 1500 ம் , நிரந்தர ஓட்டுநர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ. 5000 முதல் 6000 வரையிலும் வழங்கப்படுகிறது.
நிரந்தர ஓட்டுநர்கள் சிலர் பணிமனையிலிருந்து , பேருந்து நிலையத்திற்கு பேருந்தை எடுத்து வந்து தற்காலிக ஓட்டுநர்களிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுவதாக தமிழகம் முழுவதும் புகார் எழுந்து வருகிறது.
தற்காலிக ஓட்டுநர்களிடம் தங்களது பேருந்துகளை ஒப்படைக்கும் ஓட்டுநர்கள் அவர்களுக்கு ஊதியமாக ரூ. 1500 ஐ கொடுத்து விடுகின்றனர்
ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டிய கட்டுப்பாட்டாளர்களுக்கு பேருந்துக்கு தலா ரூ. 1500 லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பேருந்து நிலையத்தில் தங்கள் வருகையை பதிவு செய்து விட்டு 3 ஆயிரம்
ரூபாயை லஞ்சமாக
( தற்காலிக ஓட்டுநர் + கட்டுப்பாட்டளர் ) கொடுத்து விட்டு , எஞ்சிய 3 ஆயிரம் ரூ. யை தங்களுக்கு எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
உட்தணிக்கை கண்காணிப்பாளர் ரமேஸ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடு கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ