Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 அக்டோபர் (ஹி.ச.)
வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான சேவைகள் கால அட்டவணையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அந்த அறிவப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
26,495 உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் இயக்கப்படும். இந்த புதிய அட்டவணையானது அக்.26, 2025 முதல் மார்ச் 28, 2026 வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இண்டிகோ 15,014, ஏர் இந்தியா 4.277, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 3,171 விமான சேவைகளை வழங்கும்.
மொத்தம் 126 விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மொத்தம் 26,495 புறப்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த 126 விமான நிலையங்களில் அமராவதி, ஹிசார், பூர்னியா, ரூப்சி ஆகியவை புதிய விமான நிலையங்கள் ஆகும்.
அலிகார், மொராதாபாத், சித்ரகூட், பாவ்நகர், லூதியானா, பாக்யோங், சரஸ்வதி விமான நிலையங்களில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2025ம் ஆண்டு கோடை கால அட்டவணையின் போது 129 விமான நிலையங்களில் 25,610 புறப்பாடுகளாக இருந்தது.
கோடை காலத்துடன் ஒப்பிடும் போது வாரத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் 5.95 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM