சென்னையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை
சென்னையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, 7வது கட்டமாக வளசரவாக்கம் மண்டலம், லேமச் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (25.10.2025 (சனிக்கிழமை)) “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம்,

ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b