Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 25 அக்டோபர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மேட்டு தெருவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகர திமுக அலுவலக கட்டிடம், கலைஞர் நூற்றாண்டு அரங்கம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா இன்று(அக் 25) காலை நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இவற்றை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.காந்தி வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், க.செல்வம் எம்பி, எழிலரசன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர அவைத்தலைவர் கே.ஏ.செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர் சுப்பராயன், பகுதி செயலாளர்கள் கே.சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், சீனிவாசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் மலர்மன்னன் நன்றி கூறினார்.
Hindusthan Samachar / vidya.b