Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 25 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் வரும் 28, 29 மற்றும் ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
மேலும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b