தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது
கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் பிச்சு குட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, மா
The Tamil Nadu Government Village Assistants’ State Executive and General Committee meeting was held in Ulundurpet.


The Tamil Nadu Government Village Assistants’ State Executive and General Committee meeting was held in Ulundurpet.


கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் பிச்சு குட்டி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் சக்கரவர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் இராம தண்டபாணி, மாநில செயலாளர்கள் முகமது காசிம், சந்திரசேகர், மாநில பொதுச் செயலாளர் முருகன், மாநில பொருளாளர் திருப்பதி, மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபு, மாவட்ட தலைவர்கள் தேவராசன், அண்ணாமலை ,மாவட்ட பொருளாளர் ரஜினி, மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் பார்த்தசாரதி, மாநில மகரனி சுபாஷினி, வட்ட தலைவர் அருணாசலம், வட்ட செயலாளர் ராமலிங்கம், வட்ட பொருளாளர் சிவகுருநாதன், மாவட்டம் மகளிர் அணி வள்ளி, தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச் செயலாளர் முருகன்,

நான்காம் நிலைக்கு இணையான டி கிரேட் ஊதியம் வழிவிட வேண்டும், கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அரசாணை திருத்தம் கருணை அடிப்படையில் கல்விக்கு ஏற்றது போல் பணியினை வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓவியத்தை திட்டத்தை வழங்கிட வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

Hindusthan Samachar / V.srini Vasan