திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்
தூத்துக்குடி, 25 அக்டோபர் (ஹி.ச.) கந்த சஷ்டி விழா 2025 ஆறாவது நாளில், மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவிருக்கிறது. தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற்றால் கூட, திருச்செந்தூரில் நடக்கும
Tiruchendur Murugan Temple


தூத்துக்குடி, 25 அக்டோபர் (ஹி.ச.)

கந்த சஷ்டி விழா 2025 ஆறாவது நாளில், மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவிருக்கிறது. தமிழகம் எங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடைபெற்றால் கூட, திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் மிகச சிறப்பு வாய்ந்தது.

இதற்காக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். சூரசம்ஹாரம் முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூரில் நடைபெறும். இருப்பினும் அறுபடை வீடுகளும், உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விரதத்திற்கான சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதன்படி திருச்செந்தூர் - நெல்லை இடையே வரும் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறுமார்க்கம் நெல்லை - திருச்செந்தூர் இடையே திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.

இந்த ரயிலானது ஆறுமுகநேரி, நாசரேத், ஶ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் இன்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN