கிறிஸ்துமஸுக்கு பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு இன்று தொடக்கம்
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச) தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக டிசம்பர் 22 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன
கிறிஸ்துமஸுக்கு பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு இன்று தொடக்கம்


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச)

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக டிசம்பர் 22 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அண்மையில் தொடங்கியது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று (அக் 24) வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தனர்.

அதேபோல டிசம்பர் 24 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்று

(அக் 25) சனிக்கிழமை முன்பதிவு செய்யலாம்.

டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் நாளை 26 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம்.

மேலும், முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b