டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்பு
புதுடெல்லி, 25 அக்டோபர் (ஹி.ச.) டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழா இன்று (அக் 25) நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பங்கேற்பு


புதுடெல்லி, 25 அக்டோபர் (ஹி.ச.)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழா இன்று (அக் 25) நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது,

மருத்துவ அறிவியல், பயிற்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில், எய்ம்ஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மருத்துவக் கல்வி, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் எய்ம்ஸ் சிறந்து விளங்குகிறது.

இன்று இந்தியா முழுவதும் 23 எய்ம்ஸ் நிறுவனங்கள் உள்ளன, இது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயிற்சியை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வழங்குகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 -ல் இருந்து 819 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இளங்கலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,000-ல் இருந்து 1.29 லட்சமாகவும், முதுகலை இடங்களின் எண்ணிக்கை 31,000 -ல் இருந்து 78,000 ஆகவும் உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதிரி பதிவு கணக்கெடுப்பு (SRS) தரவுகளின்படி, பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை விகிதம் (MMR) 130-ல் இருந்து 88 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் (IMR) 39-ல் இருந்து 27 ஆகவும் குறைந்துள்ளது. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) மற்றும் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (NMR) ஆகியவை முறையே 42 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் குறைந்துள்ளது.

இது உலக சராசரியான 8.3 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று ‘தி லான்செட்’ அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b