Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய பெருங்கடல் தீவு நாடான செஷெல்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிபராக இருந்த வேவல் ராம் கலவன் தோல்வியடைந்தார்.
அதிபராக வெற்றி பெற்ற பேட்ரிக் ஹெர்மினியின் பதவி ஏற்பு விழா விக்டோரியா நகரில் நாளை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக செஷல்ஸ்க்கு செல்கிறார்.
செஷல்ஸ் நாட்டின் அழைப்பின் பேரில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் செல்கிறார் என்று தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த பயணத்தின் போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் வாழ்த்துக்களை ஹெர்மினிக்கு தெரிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b