வாலிபர் கொலை வழக்கு - சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை
கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.) கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (20) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுதன் தண்டி (25) என்பவர் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்
Youth murder case: Chhattisgarh native sentenced to life imprisonment – Coimbatore First Additional District Sessions Court verdict.


கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (20) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுதன் தண்டி (25) என்பவர் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை இன்று (24.10.2025) முடிவு பெற்று குற்றவாளி சுதன் தண்டி என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் அனந்த செல்வக்கனி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Hindusthan Samachar / V.srini Vasan