Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 26 அக்டோபர் (ஹி.ச.)
பீஹார் மாநிலத்தில் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரங்கள் என அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளனர்.
இந் நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார் உள்பட 11 முக்கிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் நீக்கி உள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பை பொதுச் செயலாளர் சந்தன்குமார் சிங் அறிக்கை மூலம் வெளியிட்டு இருக்கிறார்.
சந்தன்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
பீஹார் சட்டசபை பொதுத்தேர்தல் 2025 நடக்க உள்ள நிலையில், கட்சிக்கு விரோதமாகவும், சித்தாந்தத்திற்கு எதிராகவும் செயல்பட்ட 11 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீக்கப்பட்டவர்களில் சைலேஷ்குமார் என்பவர் முன்னாள் அமைச்சர் ஆவார்
இவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் ஷ்யாம் பகதூர் சிங், சுதர்சன் குமார், முன்னாள் எம்எல்சிக்கள், சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் ஆகியோரும் அடக்கம். இவர்கள் தவிர்த்து, மாவட்ட அளவிலான அமைப்புகளில் உள்ள 6 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b