Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 அக்டோபர் (ஹி.ச.)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் முருக பக்தர்கள் சஷ்டி விரத்திற்காக கோவிலில் குழுமியுள்ளனர்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை
(அக் 27) மாலை நடைபெறுகிறது. சூரசம்ஹார விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்புப்பணியில் 4 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 250க்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
20 டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 14 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 45 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள் 80 பேர் தயார்
தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b