குறைவான முன்பதிவின் காரணமாக 6 சிறப்பு ரெயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவுப்பு
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் மைசூரு-நெல்லை, மைசூரு-காரைக்குடி, மைசூரு-ராமநாதபுரம் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்து
குறைவான முன்பதிவின் காரணமாக  6 சிறப்பு ரெயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவுப்பு


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் மைசூரு-நெல்லை, மைசூரு-காரைக்குடி, மைசூரு-ராமநாதபுரம் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரெயில்களை தென்மேற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மைசூருவில் இருந்து வருகிற 27-ந்தேதி முதல் நவம்பர் 24-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) நெல்லைக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் (வண்டி எண்.06239), மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து வருகிற 28-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (செவ்வாய்கிழமை) இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் (06240) ரத்து செய்யப்படுகிறது.

மைசூருவில் இருந்து வருகிற 30, நவம்பர் 6-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை, சனிக்கிழமை) காரைக்குடிக்கு இயக்கபட இருந்த சிறப்பு ரெயிலும் (06243), மறுமார்க்கமாக, காரைக்குடியில் இருந்து வருகிற 31, நவம்பர் 7-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மைசூருக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் (06244) ரத்து செய்யப்படுகிறது.

மைசூருவில் இருந்து வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராமநாதபுரம் இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06237), மறுமார்க்கமாக, ராமநாதபுரத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி (செவ்வாய்கிழமை) மைசூருக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06238) ரத்து செய்யப்படுகிறது

இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b