சென்னையில் 5 ஏரிகளில் 79.34 சதவீதம் நீர் இருப்பு - நீர்வளத்துறை தகவல்
சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.) சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 16ம் தேதி
சென்னையில் 5 ஏரிகளில் 79.34 சதவீதம் நீர் இருப்பு - நீர்வளத்துறை தகவல்


சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)

சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு, பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அணைகள், நீர்நிலைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. இந்த 5 முக்கிய ஏரிகளிலும் மொத்தம் 79.34 சதவீதம் நீர் இருப்பு இருக்கிறது.

இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 9.328 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

இதன்படி, செம்பரம்பாக்கம் - 79.7 சதவீதம், புழல் - 81.51 சதவீதம், பூண்டி - 80.84 சதவீதம், சோழவரம் - 63.09 சதவீதம், கண்ணன்கோட்டை - 87.8 சதவீதம் என்ற அளவில் நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை கூறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b